I have heard of a Saviour's love - 289
(Tune 322 of ESB)
1. இரட்சகரொருவரின் அன்பு
பேரன்பென்று கேள்விப்பட்டேன்!
ஆனால் அவர் மோட்சம் விட்டது
ஆனால் அவர் மோட்சம் விட்டது
என் மேல் கொண்ட பாசத்தால் தானோ?
பல்லவி
ஆம்! ஆம்! ஆம்!
என்னை நேசித்ததாலே தானே
ஆம்! ஆம்! ஆம்!
என்மேல் கிருபை கூறுகிறார்
2. அவர் பாடும் இரத்தஞ் சிந்தலும்
அதிகமாய்க் கேள்விப்பட்டேன்!
ஆனால் மெய்தானா இவை எல்லாம்?
பாவி எந்தனுக்காகவே தான்! - ஆம்! ஆம்!
3. இந்த இயேசுவினடியார்க்கு
மேல் வீடொன் றிருக்கிறதாம்!
ஆனால் ஏழைப் பாவி எனக்கு
ஆனால் ஏழைப் பாவி எனக்கு
அங்கோர் பங்கு இருக்கிறதா? - ஆம்! ஆம்!
4. தேவே! நீரே என் தஞ்சமல்லால்,
வேறாருமே இல்லையதால்
உமதாவியால் இவையெல்லாம்
என் பங்கென்று காட்டிடுமேன் - ஆம்! ஆம்!
Philip Philips
No comments:
Post a Comment