Friday, December 23, 2011

பாடல் 96: நான் பாவிதான் - ஆனாலும் நீர்


    Just as I am, without one plea - 293
                   (Tune 245 of ESB)

1. நான் பாவிதான் - ஆனாலும் நீர்
    மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
    வா! என்று என்னைக் கூப்பிட்டீர்
    என் மீட்பரே! வாறேன்

2. நான் பாவிதான் - என் நெஞ்சிலே
    கறை பிடித்த நீசனே!
    என் கறை நீங்க இப்போதே
    என் மீட்பரே! வாறேன்

3. நான் பாவிதான் - பயத்தினால்
    அலைந்து பாவப் பாரத்தால்
    அமிழ்ந்து மாண்டு போவதால்
    என் மீட்பரே! வாறேன்

4. நான் பாவி தான் - விசுவாசத்தால்
    சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்
    அடைவதற்கு உம்மிடம்
    என் மீட்பரே! வாறேன்

5. நான் பாவிதான் - இரங்குவீர்
    அணைத்துக் காத்து இரட்சிப்பீர்!
    அருளாம் செல்வம் அளிப்பீர்!
    என் மீட்பரே! வாறேன்

6. நான் பாவிதான் - அன்பாக நீர்
    நீங்காத் தடைகள் நீக்கினீர்;
    உமக்குச் சொந்தமாக்கினீர்;
    என் மீட்பரே! வாறேன்
                     Charlotte Elliott

No comments:

Post a Comment