Friday, December 30, 2011

பாடல் 1: அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே


    The Founder's Song - ஸ்தாபகரின் பாட்டு - 298
                         (Tune 340 of ESB)
                   O! Boundless Salvation!

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே!
    இயேசுவால் வந்த பூரண தயவே!
    உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்!
    யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள்

2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன்
    மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன்
    அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்!
    அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள்

3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம்
    உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்;
    உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்!
    மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள்

4. சோதனைகள் மோத, பயங்கள் சூழ
    பாழாச்சுதென் ஜீவன் சுகங்கள் மாள
    மெய்யாய் இனிச் சுகம்! சுத்த நீர்க்கடல்!
    என்னை சுத்திசெய்வாய்; வா, என் மேல் புரள்

5. தயா சாகரமே! வாஞ்சையாய் நின்றேன்
    ஜீவிக்கும் ஆச்சர்ய அலை ஓரம் நான்,
    திரும்ப வந்தேன் கறை போக்குங் கடல்!
    உன்னை விட்டுப் போகேன்; வா, என்மேல் புரள்

6. புரண்டுவரும் அலைகளைத் தொட்டேன்
    மீட்க வல்லோன் என்னும் இரைச்சல் கேட்டேன்
    மீட்படைவேன் என்று நம்பி அலையில்
    இதோ மூழ்கிறேன் நான்; வா, என்மேல் புரள்

7. அல்லேலூயா! இனி என் ஜீவகாலம்
    அவர் துதியிலே மகிழ் கொள்ளுவேன்
    அளவில்லா மீட்பாம் அன்பின் ஆழியை
    இயேசு திறந்தார் எல்லாருக்காகவும்!
                                               William Booth

பாடல் 2: வாஞ்சையான நெஞ்சத்துடன்


    When I Survey – 136
         (Tune 43 of ESB)

1. வாஞ்சையான நெஞ்சத்துடன்
    தேவசுதன் தொங்கி மாண்ட
    சிலுவையைக் கண்டவுடன்
    தொய்ந்திடுதே எந்தனுள்ளம்

    பல்லவி

    இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
    இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
    சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு
    இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

2. நான் தான் என்ற ஆங்காரமும்
    லௌகீக ஆசாபாசமும்
    என் உள்ளத்தில் சங்கரியும்
    தேவே! நீரே வாசஞ் செய்யும் - இரத்தத்தில்

3. பார்! நேசர் கை கால் தலையில்
    ஓடும் அன்பின் துக்க நதி!
    ஆம் பாவி! பாவ வலையில்
    தப்பப் பாயும் ஜீவநதி - இரத்தத்தில்

4. லோக மேன்மை கீர்த்தியெல்லாம்
    இந்த அன்பிற்கு நிகரோ
    ஆத்மா தேகம் சக்தியெல்லாம்
    பூசை இதோ நீர் வாரீரோ - இரத்தத்தில்
                                               Issac Watts

பாடல் 3: கல்வாரி சிலுவையில்


    On the Cross of Calvary – 128
              (Tune 173 of ESB) 

1. கல்வாரி சிலுவையில்
    தொங்கி ஜீவனை விட்டார்
    மானிடரிதயத்தில்
    நன்மாறுதல் செய்திட
    மாசற்ற ஜீவ நதி
    பாவம் போக்கத் திறந்தீர்
    எனக்காக மரித்தீர்
    கல்வாரி சிலுவையில்

    பல்லவி

    அக்கல்வாரி! அக்கல்வாரி!
    எனக்கேசு மரித்தார்
    கல்வாரி சிலுவையில்

2. இவ் வற்புத அன்புதான்
    மீட்பருக்கு எந்தனை
    முழு தத்தஞ் செய்யத்தான்
    ஆவி ஆத்துமா தேகத்தை
    சர்வாங்க பலியாக
    இயேசுவே படைக்கிறேன்
    எனக்காக மரித்தீர்
    கல்வாரி சிலுவையில் - அக்கல்வாரி

3. நானுமக்குச் சொந்தமே
    என்னை ஏற்றுக்கொள்ளுமேன்
    நேச மீட்பர் தயவாய்
    என்னில் வாசம் பண்ணுமேன்
    பாவம் போக்கி என் நெஞ்சை
    சுத்தமாக்கி விடுமேன்
    எனக்காக மரித்தீர்
    கல்வாரி சிலுவையில் - அக்கல்வாரி

4. கர்த்தர் மாண்ட நாளதில்
    பூலோகம் அதிர்ந்தது
    இந்த மா பலியால் தான்
    கேளும் இரட்சை வந்தது
    நம்பும் எந்தப் பாவிக்கும்
    என்றும் நல் விடுதலை
    வந்திடவே மரித்தார்
    கல்வாரி சிலுவையில் - அக்கல்வாரி
                                          Sarah Graham

பாடல் 4: இருள் போன்ற நேரத்திலே


    Dark was the hour
       (Tune: 90 of ESB)

1. இருள் போன்ற நேரத்திலே
    ஓர் சத்தம் கேட்குது
    தேவ சுதன் தோட்டத்திலே 
    நொந்து ஜெபிப்பது

    பல்லவி

    கெத்சமனேயில்
    விம்மி அழுது
    ஜெபப்போரில் மீட்பர் வேர்வை
    இரத்தத்தைப்போல் விழுது

2. நேசமான உம் மகனே
    வாதைகுள்ளானாரே
    பிதாவே, உன் சித்தந்தானே
    ஆகட்டும் என்றாரே

3. எனக்காய் நீர் வேண்டுகிறீர்
    நானதைக் கேட்கிறேன்
    என் இயேசுவே! பாவி வாறேன்
    ஏற்றுகொள்ளு மென்னை
                    Samuel Wesley

பாடல் 5: ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி


    Alas! And did my Saviour bleed – 105
                  (Tune 63 of ESB)

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி
    என் ராஜா மாண்டாரோ?
    ஏழைப் புழு எனக்காக
    ஈன மடைந்தாரோ?

    பல்லவி

    என்னை நினைத்திடும் நாதா
    என்னை நினைத்திடும்
    உம் கஸ்திகளை எண்ணியே
    என்னை நினைத்திடும்

2. என் பாவத்தினாலல்லவோ
    அவர் கஸ்திப்பட்டார்
    அற்புதமாம் அன்பல்லவோ
    ஆரிதை மறுப்பார் - என்னை

3. வெயில் மறைந்திருண்டதே
    ஒளியும் போனதே
    பாவிகளாம் மானிடர்க்காய்
    சிருஷ்டிகர் மாண்ட நாள் - என்னை

4. நேசரே இதற்கு ஈடாய்
    நீசன் நான் என் செய்வேன்
    பாசத்தோடெந்தனையே நான்
    படைத்தேனுமக்கு - என்னை
                                   Issac Watts (Verses)
                                  Asa Hull (Chorus)

பாடல் 6: தொழுவத்தில் இயேசு பிறந்தார்


    When Jesus was born in the manger – 137
                 (Tune 837 of ESB)

1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்
    அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;
    தூதர் சொல்லக் கேட்டார்
    தேவன் மனிதனானார்
    ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

    பல்லவி

    பாவியை மீட்க பாவியை மீட்க
    ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
    தூதர் சொல்லக் கேட்டார்
    தேவன் மனிதனானார்
    ஏழைப் பாவி என்னை இரட்சிக்க

2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்
    அவர் எங்கள் துக்கம் சுமந்தார் 
    காவினில் ஜெபித்தார்
    இரத்தம் வேர்வை விட்டார்
    ஏழைப் பாவி என்னை இரட்சிக்க - பாவியை

3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்
    குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;
    எல்லாம் முடிந்ததென்று
    சொல்லி மரித்தார் தொய்ந்து
    ஏழைப் பாவி என்னை இரட்சிக்க - பாவியை
                                                           John Lawley

பாடல் 7: ஐயையோ நான் என்ன செய்வேன்


    இராகம்நவ்ரோஜி தாளம்ஆதி
    மெட்டு: பாதகனாய் நானலைந்தேன் 

    பல்லவி

    ஐயையோ நான் என்ன செய்வேன்  
    அங்கம் பதைத்தேங்குதையா

    அனுபல்லவி

    மெய்யாய் எந்தன் பாவத்தாலே
    மேசியா வதைக்குள்ளானார்

    சரணங்கள்

1. முண்முடி சிரசில் வைத்து
        மூங்கில் தடியாலடித்த
    சண்டாளர் செய்கையை எண்ண
        சகிக்குதில்லை எந்தனுள்ளம் - ஐயையோ

2. பெற்ற தாயார் அலறி வீழ
        பிரிய சீஷர் பதறி ஓட
    செற்றலர் திரண்டு சூழ
        தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? - ஐயையோ

3. கால் தளர்ந்து போச்சுதையா
        கைகள் சோர்ந்து வீழுதையா
    சேல்விழிகள் மங்குதையா
        தேவே எந்தன் பாவமல்லோ - ஐயையோ

4. நா வறண்டு நடை தள்ளாட
        நண்பர் கண்டு கதறி வாட
    ஜீவ இம்சையே மேலாட
        தேவே கொல்கதாவில் நீட - ஐயையோ

5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
        தேவே உம்மை மேல் கிடத்தி
    வலுவாய் கை கால்களை இழுத்து
        மாட்டினாரோ ஆணியிட்டு - ஐயையோ  

6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்
        சோர்வடைய உந்தனாவி
    வெடிக்குதுந்தன் இடது விலா,
        விரனீட்டியாலே குத்த - ஐயையோ 

7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
        வந்ததெந்தன் பாவமல்லால்
    உந்தன் குற்றம் யாதுமில்லை
        எந்தையே நீரே என் தஞ்சம் - ஐயையோ

பாடல் 8: கல்வாரிக்குப் போகலாம் வாரும்


    இராகம்: மோகனம் தாளம்: ஆதி

    பல்லவி

    கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்
        காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட

    சரணங்கள்

1. பொல்லாப் பகைஞர் கூட்டம்
        எல்லாம் திரண்டு அங்கே
    நல்லாயன் மீட்பர்தனைக்
        கொல்லும் அவஸ்தை காண - கல்வாரிக்கு

2. சிவப்பங்கி தரித்தோராய்
        சிரசில் முண்முடி சூண்டு,
    தவத்தி லுயர்ந்த நாதன்
        தவிக்கும் முகத்தைப் பார்க்க - கல்வாரிக்கு

3. ஐயோ பிதாவே என்னை
        ஏன் கைவிட்டீர் என்றழும்
    துய்யன் துயர சத்தம்
       தொனிக்கிற தங்கே இன்னம் - கல்வாரிக்கு

4. நாவு வறண்டதினால்
        தாகங்கொண்டேன் என்றாராம்
    பாவிகள் காடிதனைக்
        கூடிக் கொடுத்தனராம் - கல்வாரிக்கு

பாடல் 9: என்ன செய்குவேன்


    இராகம்கோகிலத்வனி தாளம்திரிபுடை

    பல்லவி

    என்ன செய்குவேன்!

    அனுபல்லவி

    எனக்காய் இயேசு மைந்தன்
    ஈனக் குருசில் உயிர் விட்டனர்

    சரணங்கள்

1. கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்க
    முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து
    மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்
    பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் - என்ன  

2. வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்
    நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல
    காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்
    தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் - என்ன

3. எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்
    இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது
    சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்
    வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! - என்ன

பாடல் 10: செல்லுவோம் வாரீர்!


    இராகம்: முகாரி தாளம்: ஆதி

    பல்லவி

    செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்

1. சொல்லரிய நாதன் - சுய சோரி சிந்தி
    அல்லற்படுகின்ற - ஆகுலத்தைப் பார்க்க - செல்லுவோம்

2. ஒண்முடி மன்னனார் - முண்முடி தரித்து
    கண்மயங்கித் தொங்கும் - காட்சியைப் பார்க்க - செல்லுவோம்

3. மூங்கில் தடியாலே - ஓங்கியே அடிக்க
    ஏங்கியே தவித்த - இயேசையனைப் பார்க்க - செல்லுவோம்

4. சத்துருவின் கையில் உற்ற ஆட்டை மீட்க
    மெத்தப் பாடுபட்ட - நல்மேய்ப்பனைக் காண - செல்லுவோம்

5. கிருபாசனத்தில் - குருதியோடு சென்ற
    அருமைப் பிரதான - ஆசாரியனைப் பார்க்க - செல்லுவோம்

6. பாவ வினைபோக - தேவ தயவாக 
    ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க - செல்லுவோம்

7. நித்திய சாவின் கூரை - பக்தி தேகத்தேற்று
    வெற்றிபெற்ற இயேசு - மேசியாவைப் பார்க்க - செல்லுவோம்

8. கடனாளிகட்குப் - பிணையாளியாக
    உடலுயி ரீந்த - உன்னதனைப் பார்க்க - செல்லுவோம்

9. பிடித்து உதைத்து - இடித்து வதைத்து
    அடிக்கப்படும் நல் - ஆட்டுக்குட்டியைப் பார்க்க - செல்லுவோம்
                                                                                                AV. ஆபேல்

பாடல் 11: வாரீரோ! செல்வோம்


    இராகம்: முகாரி தாளம்: ஆதி

    பல்லவி

    வாரீரோ! செல்வோம் - வன்குருசடியில்

    சரணங்கள்

1. என்னென்று அறியார் - மண்ணோர் செய்த பாவம்
    மன்னியப்பா வென்ற - மத்தியஸ்தனைப் பார்க்க - வாரீரோ

2. அன்று கள்ளனோடு - இன்று பரதீசில்
    வந்திடுவாய் என்ற - வல்லவனைக் காண - வாரீரோ

3. இவனுன் சேய் என்றும் - அவளுன் தாய் என்றும்
    புவிவாழ்வீரென்ற - புண்ணியனைப் பார்க்க - வாரீரோ

4. ஒன்னாரைக் கைவிட - எண்ணமில்லா நாதன்
    என்னையேன் கைவிட்டீர் - என்ற உரை கேட்க - வாரீரோ

5. தேவ கோபமூண்டு - ஏகன் நா வறண்டு
    தாகமானேன் என்று - சாற்றினதைக் கேட்க - வாரீரோ

6. ஏவை வினை தீர - தேவ நேய மேற
    யாவும் முடிந்தது - என்ற வாக்கைக் கேட்க - வாரீரோ
     
 7. அப்பன் வசந்தீறாய் - இப்போதாவி நேராய்
     ஒப்புவித்தேன் என்ற - ஓசையுரை கேட்க - வாரீரோ
                                                                                   AV. ஆபேல்

பாடல் 12: பேரன்பர் இயேசு நிற்கிறார்


    The Great Physician now is near – 67
               (Tune 449 of ESB)

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்
    மகா வைத்தியனாக 
    கடாட்சமாகப்  பார்க்கிறார் 
    நல் நாமம் போற்றுவோமே

    பல்லவி     

    விண்ணில் மேன்மை பெற்றதே
    மண்ணோர்க் கின்பமாகவே
    பாடிப்போற்றும் நாமமே
    இயேசு என்னும் நாமம்

2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
    அஞ்சாதே என்கிறாரே;
    சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
    மெய்ப் பாக்கியம் ஈகிறாரே - விண்ணில்

3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே
    மேன்மை உண்டாவதாக!    நேசிக்கிறேன் இயேசு நாமம்
    நம்பிடுவேன் என்றென்றும் - விண்ணில்

4. குற்றம் பயம் நீக்கும் நாமம்
    வேறில்லை இயேசுவே தான்!
    என் ஆத்மா பூரிப்படையும்
    அந்நாமம் கேட்கும்போது - விண்ணில்
                                                      William Hunter