Friday, October 14, 2011

பாடல் 348: யுத்தம் என்றும் செய்வேன்


    பல்லவி

    யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;
    சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே!

    சரணங்கள்

1. எத்தனை சோதனை - பித்தன் பேய் சோதித்தும்
    அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் - யுத்தம்

2. முந்தின பக்தரை - சோதித்தாற் போலவே
    எந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் - யுத்தம்

3. சோதித்தான் ஸ்வாமியை - வாதித்தான் யோபுவை
    சாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே - யுத்தம்

4. தீர்க்கமாய் முன் சென்று - ஊக்கமாய் படையில்
    தூக்கமில்லா உற்சாகமாய் நான் ஊழியம் செய்வேன் - யுத்தம்

5. இயேசுவை நம்பியே - நேசத்தைக் காட்டியே
    நாசத்தை விட்டு நீங்கியே தாசராய் ஜீவிப்போம் - யுத்தம்

No comments:

Post a Comment