பல்லவி
போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம்
சரணங்கள்
1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்
தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,
விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்
சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! - போர்
2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்
நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;
அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,
பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! - போர்
3. தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல்,
ஆவலாய் அவருக்கே தொண்டு செய்து,
ஜீவனைப் பேணாமல் ஜாக்ரதையாகவே
ஆவியைப் பெற்று நாம் ஆனந்தமாக! - போர்
No comments:
Post a Comment