Rock of Ages cleft for me - 227
(Tune 162 or 165 or 166 of ESB)
1. பிளவுண்ட மலையே
புகலிடம் தாருமேன்;
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷங்கள் யாவும்
நீங்கும்படி அருளும்
2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,
கஷ்டத் தவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே
ஏதுமின்றி ஏழையேன்
உம்மில் தஞ்சம் புகுந்தேன்
3. நிழல் போன்ற வாழ்வினில்,
அங்கம் சாகும் நாளிலே,
இம்மை விடும் நேரத்தில்,
நியாயத்தீர்ப்பின் நாளதில்,
பிளவுண்ட மலையே!
புகலிடம் தாருமேன்!
Augustus M. Toplady
No comments:
Post a Comment