பல்லவி
பரிசுத்த அக்கினி அனுப்புந் தேவா!
பரந்து ஜூவாலிக்கக் கொழுத்தும் தேவா!
சரணங்கள்
1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாயுள்ளத்தைத் தொட்டருளும்! - பரிசுத்த
2. தேச மெங்கும் திவ்விய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க! - பரிசுத்த
3. கன்னிகை விருத்தர் வாலிபரும்,
உன்னத ஆவியால் நிரம்பிடவும்! - பரிசுத்த
4. பாவிகள் யாவரும் மனந் திரும்ப,
பரலோக அக்கினி நாவருளும் - பரிசுத்த
5. இயேசுவின் பேரன்பை உணர்ந்தெவரும்
நேச விஸ்வாசத்தில் வளர்ந்திடவே! - பரிசுத்த
No comments:
Post a Comment