Monday, October 17, 2011

பாடல் 319: கர்த்தா பேசும் தாசன் கேட்பேன்


    Master speak they Servant Heareth - 614
                     (Tune 462, 373 of ESB)

1. கர்த்தா பேசும் தாசன் கேட்பேன்
    அன்பின் வார்த்தைக்காய் நிற்பேன்
    தைரிய மூட்டும் சத்தம் கேட்க
    பேசுவீர் இப்போதே தான்!
    கர்த்தா வேண்டும் வார்த்தை சொல்வீர்!
    கேட்கிறேன் இப்போது நான்

2. கர்த்தா பேசும் பெயர் சொல்லின்
    அறிவேன் அதென்னையே!
    வேகமாய்ப் பின் சென்றிட என்
    கால்களைத் திடனாக்கும்;
    மேய்ப்பர் மந்தை ஓட்டிக்குன்றின்
    நன் நிழலில் மேய்த்தாற்போல்

3. கர்த்தா பேசும் பேதையேனும்
    கேட்டல்லால் விடாதிரும்.
    கர்த்தா பேசும் எந்தன் ஆத்ம
    வாஞ்சையை அறிவீரே;
    அறிவீர் என் தேவைகளை
    தேர்ந்து ஆசீர் அளிப்பீர் 
   
4. கர்த்தா பேசும் தம் வாக்கை நான்
    கேட்க ஆயத்தம் செய்வீர்,
    கீழ்ப்படிவேன் சந்தோஷமாய்
    கைக் கொள்வேன் தம் வார்த்தையை,
    கர்த்தா வேண்டும் வார்த்தை சொல்வீர்
    கேட்கிறேன் இப்போது நான்
                                                    Frances Ridley Havergal

No comments:

Post a Comment