Tuesday, October 18, 2011

பாடல் 300: எப்போதும் இயேசுவே


    I need Thee every hour - 606
                 (Tune 479 of ESB)

1. எப்போதும் இயேசுவே
    சகாயராயிரும்;
    அன்பான சத்தத்தால்
    என் ஏக்கம் நீக்கிடும்!

    பல்லவி

    எந்நாளும் நீரே வேண்டும்!
    இந்த நாளும் வேண்டும்!
    நீர் என்னை நோக்கிப் பாரும்!
    பேரன்பரே!

2. எப்போதும் இயேசுவே!
    இத் தாசனோடிரும்;
    தீயோனின் சோதனை
    உம்மால்தான் மாய்ந்திடும் - எந்நாளும்

3. எப்போதும் இயேசுவே!
    இக்கட்டு வாழ்விலும்,
    அன்பாகத் தங்கு மென்
    வாஞ்சிக்கும் நெஞ்சிலும் - எந்நாளும்

4. எப்போதும் இயேசுவே!
    உம் சித்தம் போதியும்;
    உம் வாக்குத் தத்தங்கள்
    என்னில் நிறைவேற்றும் - எந்நாளும்
                                 Anne S. Hawks

No comments:

Post a Comment