Tuesday, October 18, 2011

பாடல் 302: இந்த வேளை வந்து


    பல்லவி

    இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!

1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!
    சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!
    ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! - இந்த

2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் - தேவா
    அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி - எனை
     ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! - இந்த

3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா - ஏழைப்
    பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் - உனைப்
    பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய் - இந்த

4. இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் - நின்
    சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக
    தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா! - இந்

No comments:

Post a Comment