Wednesday, October 19, 2011

பாடல் 285: ஆயத்த ஜெபம் செய்ய


    இராகம்: இந்துஸ்தானி தாளம்: மிஸ்ர சாப்பு

    பல்லவி

    ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
    அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி

    சரணங்கள்

1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா
    சர்வாயுதம் தந்து காத்திடுமையா - ஆயத்த

2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா!
    சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் -
ஆயத்த

3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்
    கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் - ஆயத்த

4. கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி
    கனிவுடன் மன்றாட அருள் செய்யும் சுவாமி! - ஆயத்த

5. இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை,
    இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா! - ஆயத்

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete