Sunday, October 23, 2011

பாடல் 249: ஆவியை அருளுமேன் சுவாமி


    பல்லவி

    ஆவியை அருளுமேன் சுவாமி - எனக்காய்
    உயிர் கொடுத்த வானத்தின் அரசே!

    சரணங்கள்

1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,
    ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,
    பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,
    பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி - ஆவியை

2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவி
    பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,
    ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,
    ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி - ஆவியை

3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட ஆவி,
    பக்தர்க்குப் புதுப் பெலன் அளித்திட்ட ஆவி,
    கல்வாரிப் பாதையில் நடத்திடும் ஆவி,
    கர்த்தரே! உம் சித்தம் செய்திடும் ஆவி - ஆவியை

4. பாவத்தை தேவரீர் காண்பதைப் போல,
    பரமனே! அடியேனும் தானாகக் காண
    தேவ வரமதனை அளித்திடும் ஐயா!
    தெளிவுடன் அதை நான் பாவிக்குக் கூற - ஆவியை

5. உலகத்தார் மாண்டு போகிறார் சுவாமி!
    உன்னத ஆவி வேண்டுமென் சுவாமி;
    மலர்ந்தெங்கள் முகங்களை நோக்குமேன் ஐயா
    மழைபோல் ஆவியை வருஷியும் ஐயா! - ஆவியை

No comments:

Post a Comment