Sunday, October 23, 2011

பாடல் 252: ஆவியை மழைபோலே ஊற்றும்


    இராகம்: அமிர்த கல்யாணி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆவியை மழைபோலே ஊற்றும் - பல சாதிகளை
    இயேசு மந்தையிற் கூட்டும்

    அனுபல்லவி

    பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்துவே
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

    சரணங்கள்

1. வருகையின் நாள் கிட்டிடுதே - துஷ்ட
    மாறாட்டக்காரரின் கொடுமை மிக்குதே;
    ஐந்து காயத்தில் அடைக்கலத்தைப் பெற
    எந்தையே பாவியை ஏவி எழுப்பிட - ஆவி

2. அன்பினால் ஜீவனை விட்டீர் - ஆவி
    அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
    துன்மார்க்கன் பாவத்தை முற்றாக வெறுத்து
    சன்மார்க்கர் பாதையில் சான்றோனாய்ச் செல்ல - ஆவி

3. சாத்தானின் கோஷ்டம் அதிகம் - அவன்
    தந்திர குணங்களின் சேஷ்டை அதிகம்;
    கர்த்தன் கிறிஸ்துவின் திருக் கரத்தாலே
    கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும்! - ஆவி

4. இரட்சண்ய கீதங்கள் பாட - எங்கும்
    இரட்சண்ய மூர்த்தியைப் பாவிகள் தேட
    பக்தி வைராக்கியத்தால் நிறைந்து போர் செய்ய
    பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்! - வி

No comments:

Post a Comment