பல்லவி
தேவாதி தேவா திரியேக தேவா!
சரணங்கள்
1. தம்மைத் தாமே ஏழைகட்காய்
தத்தம் செய்த மேசியாவே!
உம் ஆவியை எங்கள் பேரில்
ஊற்றி உயிர்ப்பியுமேன் - தேவாதி
2. நொடி தோறும் தேவரீர்!
அடியாரைக் காக்கிறீர்;
கூடிப் பணிந்தும்மைத் தேட
நாடும் ஆவி தந்திடுமேன் - தேவாதி
3. நன்றி யுற்ற உள்ளத்தோடே
என்றும் உம்மைப் போற்றிட,
உந்தனது கிருபையாலே
எந்த னாத்மம் நிரப்பிடுமேன் - தேவா
No comments:
Post a Comment