Friday, October 21, 2011

பாடல் 272: கெட்டோனை இரட்சியும்

    Rescue the perishing - 691
               (Tune 775 of ESB)

1. கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்,
    பாவமும், சாபமும் நீங்கச் செய்யும்
    சோர்வோனைத் தாங்கிடும், வீழ்ந்தோனைத் தூக்கும்
    சுப விசேஷத்தை அறிவியும்!
    
    பல்லவி

    கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்
    இயேசு தயாபரர் இயேசு வல்லோர்

2. பாவ சண்டாளரைப் பொறுமையோடு
    திருத்தி இரட்சிக்கப் பார்க்கிறாரே;
    மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடு
    வந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே - கெட்டோனை

3. கெட்டோனை இரட்சியும் ஆத்திரத்தோடு
    ஆவியின் வல்லமை அருளுவார்
    இரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடு,
    தேவாசீர்தாமும் தந்திடுவார் - கெட்டோனை
                                                                               Fanny Crosby

No comments:

Post a Comment