Tuesday, October 25, 2011

பாடல் 240: உனக்கொத்தாசை வரும்


    இராகம்பிலஹரி தாளம்: திஸ்ரஏகம்

    பல்லவி

    உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் இதோ!
   
    அனுபல்லவி

    தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவானே

    சரணங்கள்

1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்
    மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? -  உனக்கொத்தாசை

2. காலைத் தள்ளாட வொட்டார் கரத்தைத் தளர வொட்டார்;
    மாலையுறங்க மாட்டார் மறதியாய்ப் போக மாட்டார் -  உனக்கொத்தாசை

3. கர்த்தருன்னைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம்
    நித்திய முந்தனுக்கு நிழலாயிருப்பவராம் -  உனக்கொத்தாசை

4. பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும்
    துயர் தருவதுமில்லை துன்பஞ் செய்வதுமில்லை -  உனக்கொத்தாசை

5. தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல்
    தாங்குவோர் தூதர் கோடி தாளிடறாதபடி -  உனக்கொத்தாசை

6. போக்கும் ஆசீர்வாதாமாம் வரத்தும் ஆசீர்வாதமும்;
    காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே -  உனக்கொத்தாசை

7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்
    இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே -  உனக்கொத்தாசை

No comments:

Post a Comment