Saturday, October 22, 2011

பாடல் 261: என்னுள்ளத்தை மீட்பர்க்குப் படைத்தேன்

    I bring my heart to Jesus- 420
                     (Tune 675 of ESB)

1. என்னுள்ளத்தை மீட்பர்க்குப் படைத்தேன்
    என் சிந்தை அனைத்தும் ஒப்பித்தேன்
    அவரால் என் ஆத்மா ஆறிற்று
    அவரின் நேசத்தால் தேறிற்று,
    மீட்பர்க்கும் எனக்கும் ஐக்கியம்!
                                        நித்தியம்

2. மீட்பர்க் கென் கவலையைச் சொன்னேனே;
    அவர் பாதம் ஜீவன் வைத்தேனே;
    லோகத்தின் செல்வங்கள் வாடிப் போம்!
    அவரின்றி ஜீவன் பாழாய்ப் போம்!
    இயேசென் ஜீவனிலும் உத்தமம்!
                                           நித்தியம்

3. பாவத்தோடு மீட்பர் முன் ஜெபித்தேன்
    இரத்தத்தால் நான் சுத்தம் தரித்தேன்
    அவர் தயவை நான் தேடினேன்;
    கண்ணீரோடு வாக்கை நாடினேன்
    அறிவேன் என் இயேசு ஜீவிக்கிறார்!
                                           மீட்கிறார்!

4. எனதெல்லாம் இயேசண்டை வைத்திட்டேன்
    ஆத்ம சுத்தம் வேண்டிக் கேட்டிட்டேன்
    ஒன்றையும் மறந்து வைத்திடேன்;
    துன்பமாம் சிலுவை தள்ளிடேன்;
    தீ வந்தென் சிறையை நீக்குது!
                                        மீட்குது!
                                         Herbert H Booth

No comments:

Post a Comment