Tuesday, October 18, 2011

பாடல் 292: கேளென் விண்ணப்பத்தை


    பல்லவி

    கேளென் விண்ணப்பத்தை
    திரியேகா!

    அனுபல்லவி

    பாவிகளை மீட்கவும்
    பேயின் கூரொடிக்கவும் 

1. பக்தர்கள் பெருக்கமாய்,
    கர்த்தரை உருக்கமாய்
    கத்தும் ஆத்ம விண்ணப்பத்தைக்
    கேளாயோ? - கேளென்

2. பொய்யன் பேய் சிறைகளாய்
    வையகத்தோர் சிக்குண்டு
    செய்யும் கர்ம பாதகத்தை
    உணர்த்தாயோ? - கேளென்

3. சிற்றின்ப வலைகளில்
    சிக்குண்டலைவோர்களை
    சற்றே எழுப்பிடீரோ
    சருவேசா! - கேளென்

4. இந்த தேசம் சுவாமியின்
    சொந்த ஜனமாகவே
    வந்து மனமாறல் பெற
    இரங்காயோ? - கேளென்

5. ஆவியான ரூபியே!
    பாவியைக் கிருபையாய்
    சாவின் புண்யத்தாலே
    உள்ளம் மாற்றாயோ? - கேளென்

No comments:

Post a Comment