Monday, October 17, 2011

பாடல் 318: தனித்தும் சமூகத்திலே


    In the secret of Thy Presence - 591
                      (Tune 449 of ESB)
  
1. தனித்தும் சமூகத்திலே
    கர்த்தர் வாழும் இடத்திலே
    சொல் லொண்ணாத வல்லமையும்,
    ஊழியத்தின் ஊற்றும் உண்டே;
    அன்பின் காணிக்கையுடனே,
    என் உள்ளம் துதி செய்யும்;
    தம் சித்தத்தை வெளியாக்கி
    தாமே காட்சி யளிப்பார்

        தனித்தும் சமூகத்திலே
        உம் வல்லமை ஒதுக்கிலே
        உம்மை நான் நேசித்துழைக்க
        அருளேன் ஆயுளெல்லாம்

2. நாவு சொல்வதற்கு மேலாய்
    கைகள் செய்வதற்கும் மேலாய்
    என் பக்தி மிக ஆழமாய்
    என் மீட்பர் ராஜனுக்கே;
    வேறொன்றும் உருக்கமாக
    உண்மையாய் காத்திடாது,
    நறுமணம் வீசச் செய்யாது
    நான் செய்யும் சேவை தனில் - தனித்தும்

3. தேவா உம்மை நேரில் பார்த்து,
    தரி சித்ததை சொல்வதில்
    ஜீவியத்தில் முற்றும் ஆண்டு,
    ஒளி வீசிடச் செய்யும்;
    என்னை முற்றுமாய் படைத்தேன்
    முற்றுமாய் ஒப்பு வித்தேன்
    அறிந்தும்மை சேவித்துப் பின்
    நேரில் உம்மை காணவே - தனித்தும்
                                           Albert Osborn

No comments:

Post a Comment