Saturday, October 22, 2011

பாடல் 253: சுவாமி உந்தன் ஆவியை ஊற்றாயோ?

    பல்லவி

    சுவாமி உந்தன் ஆவியை ஊற்றாயோ? எந்தன்
    ஆத்துமத்தை இப்போ தேற்றாயோ?

    சரணங்கள்

1. நானென்ற ஆங்காரத்தை  நொறுக்காயோ? நல்ல
    நீதி மெய் மார்க்கத்தில் நிறுத்தாயோ - சுவாமி

2. லௌகீக ஆசாபாசம் மாற்றாயோ? - கெட்ட
    பாவிகளை மீட்க அன்பை ஊற்றாயோ? - சுவாமி

3. என்னை மீட்க உயிரைக் கொடுத்தவா! - அற்ப
    நீசன் நான் என்னைப் படைத்தேனே! - சுவாமி

4. தேவே! என்னை ஏற்றுக்கொள்ளாயோ? - உந்தன்
    அடிமை மூலமாய் ஆத்மா வெல்லாயோ? - சுவாமி

5. யாக்கோபைப் போல நான் போராட - நீசப்
    பாவிகளை உந்தன் பதம் சேர்க்க! - சுவாமி

6. வேதாளத்தின் தலையை உடைத்துவிட - மெய்
    வெற்றி பெற்றவனாய் நான் ஆகிவிட! - சுவாமி

No comments:

Post a Comment