Saturday, October 22, 2011

பாடல் 259: என்ன துன்பநாள்!


    இராகம்: கமாஸ் தாளம்: ஆதி

    பல்லவி

    என்ன துன்பநாள்! இயேசென்னோடில்லா நாள்
    இன்பமே தோன்றாத நாளாம் - என் வாழ்வு நாள்

    அனுபல்லவி

    ஒளிமங்கிப் போனநாள் மகிழொழிந்திட்ட நாள்!
    எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்பநாள்!

    சரணங்கள்

1. அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே!
    அவர் முன்னென் துயர் போமோ-மா நேர்மையே!
    பயமொன்று மில்லையே பரனடி நிற்கவே
    தயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே - என்ன

2. கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையே
    கொண்டு வைத்தேனெனதெல்லாம் - என் நாதன் முன்,
    ஒன்றுமே இவர்க்கு ஒப்பில்லை - எனக்கு
    என்றும் இன்பம் தந்து இயேசு என்னில் வசிப்பதற்கு - என்ன

3. ஆ எந்தன் தேவனே நானுந்தன் தாசனே!
    நீரெனது தஞ்சமானால் தயக்கமேன்?
    கெஞ்சுறேன் நானே, கிருபை கூர்ந்தையனே!
    புன்னகையோடென்னை ஆண்டு பொற்பதி சேர் மெய்யனே! - என்

No comments:

Post a Comment