Tuesday, October 18, 2011

பாடல் 301: நேசரே நான் ஜெபிக்கிறேன்


     Let me hear Thy voice - 502
               (Tune 445 of ESB)


1. நேசரே நான் ஜெபிக்கிறேன்
    பேசுமேன் கீழ்ப்படிவேன்
    குருசண்டை இதோ வாறேன்;
    பயம் நீர் நீக்குமேன்
    உமது சுடரை வீசி
    உட் குறைவை நீர் காட்டி
    இப்போ என் ஆத்துமத்தில் பேசி
    உம்மண்டை இழுமேன்

    பல்லவி

    மீட்பா பேசும்
    உமது சித்தம் செய்ய;
    குருசண்டை அடியேன்
    காத்து ஜெபிக்கிறேன்

2. பேசுமேன் நான் அஞ்சமாட்டேன்,
    துன்ப பாதை தனிலும்;
    உம் அன்பால் விழவே மாட்டேன்
    துணை நீர் அப்பனே!
    இப்போ என் இதயத்தை நீர்
    ஆலயமாய்க் கொள்ளுமேன்;
    பாவம் யாவையும்
    என்னைச் சொந்த மாக்கும் - மீட்பா

3. மீட்பரின் உதிரத்தாலே
    முற்றும் சுத்தமானேன் நான்;
    இனி என் பாவத்தினாலே;
    உம்மைக் கோபம் மூட்டேன்;
    உலகத்தின் இன்பம் வேண்டாம்
    சிற்றின்ப மாய்கை வேண்டாம்
    உம்மையே என் தஞ்சமாக
    பிடித்தேன் முற்றாக! - மீட்பா
                              Herbert H. Booth

No comments:

Post a Comment