Saturday, October 22, 2011

பாடல் 262: என் பாவம் யாவும் கழுவி


    It is the Blood that washes white - 113
                   (Tune 130 of ESB)
1. என் பாவம் யாவும் கழுவி
    என்னைச் சுத்தி செய்து
    நல் மன சாட்சி உண்டாக்கி
    காக்கும் இரத்தம் இது!

    பல்லவி

    இரத்தந்தான் என் புண்யமே!
    உள்ளம் வெண்மை யாக்குதே!
    பாவமெல்லாம் நீங்கிற்று!
    மீட்பர் சொந்த மாயிற்று!

2. தீய பேயின் வல்லமையை
    நீக்கி விடுவித்து
    மெய்யாய் சுத்த ஜீவியத்தை
    தரும் இரத்தம் இது! - இரத்தந்தான்

3. பூரண இரட்சிப்பு என்னும்
    வாசலைத் திறந்து
    பாவ மற நாம் ஜீவிக்க
    வழி காட்டும் இது! - இரத்தந்தான்

4. பரிசுத்தமாய் ஜீவித்து
    மெய் இன்பம் ருசித்து
    விஸ்வாசமாய் மரிப்போர்க்கு
    மோட்சம் ஈயும் இது! - இரத்தந்தான்
                                                William Pearson

No comments:

Post a Comment