Tuesday, October 18, 2011

பாடல் 306: கிருபை கூர் ஐயா


    இராகம்: கமாஸ் தாளம்: ரூபகம்

    பல்லவி

    கிருபை கூர் ஐயா - உந்தன்
    அறிவில் தேற்றையா! - என்மீது

    அனுபல்லவி

    சிறியேன் நானையா - பாவ ஜென்மிதானையா! - நான்
    நெறி யேகிட பெலம் நல்கிட - வேண்டுறேனையா!

1. புவனமேல் மா புண்ணியவான் புனிதனேசுவே!
    தவனமுறும் ஆன்மாதனை தாங்கி மீட்பீரே! - உம்
    பவனமாகவே நான் - என் மனதைப் பற்றுமேன்!
    கவனமாக நான் கர்த்தா! உன்னைக் கண்டடையச் செய்யுமேன் - என்மீது

2. தீமை செய்ய நாடு தெந்தன் திருக்கு நெஞ்சமே!
    நேர்மை பெற நினை யல்லாது யாரென் தஞ்சமே!
    வாய்மை பஞ்சமே! தெய்வ வணக்கம் கொஞ்சமே!
    தாழ்மையாய் உந்தன் தாழ்பணிந்தேன் தாராய் உன் தஞ்சமே - என்மீது

3. பரத்தை நோக்க மனமுமற்ற பதடி நான் ஐயோ!
    சிரத்தை கொண்டு ஓட உந்தன் ஜீவ பாதையோ,
    வருத்தமா மையா உயர் வலிமை தா ஐயா!
    கர்த்தனே எந்தன் காட்சி கண்டு நான் களிக்கச் செய் மெய்யாய் - என் மீது
                                                                                                     K.S. Abraham

No comments:

Post a Comment