Saturday, October 22, 2011

பாடல் 256: அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே


    இராகம்: காப்பி தாளம்: ஆதி

    பல்லவி

    அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!
    இயேசு மெய்யனே! மா தூயனே - திருச்சுதனே!

    சரணங்கள்

1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்
    துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!
    சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,
    சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே
    பரிசுத்தனே! என தத்தனே! - அன்பிற்

2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே
    என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;
    உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!
    வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!
    அரும் போதனே! என தரணே - அன்பிற்

3. தேற்றரவாள னெனில் தினம் வசிப்பாரே?
    ஆற்றல் செய் தெந்தனை அணைத்துக்கொள்வாரே!
    போற்ற என் னகம் தேவ வீடாக்குவாரே!
    புண்ய மிது எனது புகழ்ச்சி! மன மகிழ்ச்சி!
    இல்லை இகழ்ச்சி! இதென் சாட்சி! - அன்பிற்

4. தேவ ராஜ்ய மெந்தன் சொந்தமதாமே!
    பாவி எனக்கு வந்த மா பங்குதாமே!
    ஜீவ நாதனோ டங்கு சுகித்திருப்பேனே!
    ஆவலா யங்கு வர நானே! அருள் கோனே!
    என் சீமானே! நீ தானே! - அன்பிற்

No comments:

Post a Comment