Thursday, October 13, 2011

பாடல் 356: என்ன சுகம் ஆ! என்ன சுகம்


    பல்லவி

    என்ன சுகம் ஆ! என்ன சுகம் என் இரட்சகரின் சமூகம்
    பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்
    அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்!

    சரணங்கள்

1. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்
    சிங்காசனத்தில் சொகுசாயிருக்கலாம் - என்ன

2. பொன்னகர் வீதியில் எந்நேரம் வாழலாம்
    கின்னரம் தம்பூரினின்னோசை கேட்கலாம் - என்ன

3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம்
    ஜீவ கனியும் புசித்துச் செழிக்கலாம் - என்ன

4. நீதியின் சூரியன் நித்தியம் பார்க்கலாம்
    ஜோதிமயத் தூதர் துத்தியம் கேட்கலாம் - என்ன

5. பாவலர் பாடல் பலவிதம் கேட்கலாம்
    தேவ சமூகம் தரிசித்திருக்கலாம் - என்ன

6. மூப்பர்கள் ஆர்ப்பரிப்பெப்போதும் கேட்கலாம்
    மேய்ப்பரை ஆர்ப்பரித்தெப்போதும் போற்றலாம் - என்ன

7. இயேசுவின் தாசராய் எந்நேரம் வாழலாம்
    தோஷமில்லாமல் சுகமாயிருக்கலாம் - என்

No comments:

Post a Comment