1. என்ன என் ஆனந்தம்! என்ன என் பேரின்பம்!
தூதரோடு நின்று நானும் அன்பரைப் பாடிடுவேன்
2. இத்தரை யாத்திரையில் முற்றிலும் போராட்டமே
மண்ணில் வெற்றி சிறந்தோர்க்கெல்லாம் நித்திய மகிமையே - என்ன
3. மண்ணான இந்த உடல் மண்ணாகப் போனாலுமே
எக்காளம் தொனிக்கும் போது தன்னுருவாயெழும்பும் - என்ன
4. லோக ஜீவனே இது புல்லுக்கொப்பானதே
வாடிப்போகும் பூவைப்போல மாய்ந்துபோகுமே! - என்ன
5. இப்பாழுலகினில் எனக்காசை ஒன்றுண்டோ? வெறும்
பஞ்சைப் போல் பறந்து போகும் பாழுலகமே - என்ன
6. என் நேசர் மார்பினில் நான் சாயும் நேரமே
என்ன இன்பம்! என்ன மதுரம்! சொல்லலரியதே - என்ன
7. பொன் தளமாம் வீதி இங்கித சாலேமிலே
பொன் நேசரோடு நின்று நானும் ஓடி யுலாவிடுவேன் - என்ன
No comments:
Post a Comment