It's true there's a beautiful city
(Tune 514 of ESB)
1. மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு
அதன் வீதிகள் பொன்னாம்!
அம் மாட்சிமைகள் அதிகம்
நம் நாவால் சொல்லக் கூடாதாம்
மெய்யாய் மெய்யாய்
எனக்கோர் பங்கு உண்டு
2. மரித்த உன் பெந்துக்கள்
அவ்விடம் இருப்பார்;
உன் மீட்பர் பாதத்தைத் தேடு
அப்போ அவரைப் பார்ப்பாய்
சொல்வேன் சொல்வேன்
நீ அவரைச் சந்திப்பாய்
3. அங்கே பரிசுத்தர் தான்
உட் செல்லக் கூடுமாம்!
பாவிகளாய் ஜீவிப்போர்கள்
ஓர் போதும் போகக் கூடாதாம்;
ஆனால் ஆனால்
இப்போ சுத்தன் ஆவாய் நீ!
4. உன் பாவங்களை மன்னிக்க,
பரன் மானிடன் ஆனார்;
உன் மீறுதல்களை நீக்க
உதிரம் சிந்தினார்;
இப்போ இப்போ
உன் மீட்பர் அண்டை வா
No comments:
Post a Comment