Wednesday, October 12, 2011

பாடல் 372: நித்திய மோட்சானந்த


    சரணங்கள்

1. நித்திய மோட்சானந்த - மகிமை
    நினைத்தால் முடியாது - ஆனால்
    மெத்தச் சுருக்கமதாய் - வேதத்தோ
    டொத்துப் பார்த்தால் தெரியும்

2. மங்கள நகரத்திற்கு - மதில் வச்சிரக்
    கல்லாலே போட்டிருக்கும் - மிகு
    தங்கத்தைப் போல் பளிங்காய்த் துலங்கிடும்
    சாயுச்சியப் பட்டணமே

3. சூரிய சந்திரனின் ஒளியங்கு
    தோன்றிடக் கூடாது - இயேசு
    நீதியின் சூரியனாய்ப் பிரகாசிப்பார்
    நிச்சயம் நிச்சயமே

4. துன்பத்தின் பாதை சென்ற - பரிசுத்த
    சுவாமியின் மக்களெல்லாம் - பே
    ரின்பத்தால் சூழப்பட்டு இராக்காலம்
    இல்லாமல் வாழ்ந்திடுவார்

5. கண்ணீரும் அறியார்கள் - மனக்
    கவலையுமறியார்கள் - ஜீவ
    தண்ணீரால் தாகம் நீங்கி, சதா காலம்
    சந்தோஷம் கொண்டாடுவார்

6. நோய் பிணி யணுகாது - கெட்ட
    பேய்களுமணுகாது - அங்கே
    ஓசன்னாப் பாட்டுடனே தெய்வத்தை
    ஓயாமல் போற்றிடுவார்

7. ஆசனம் இயேசுவுடன் - ஜெயம் பெற்ற
    அன்பர்க்குப் போட்டிருக்கும் - அங்கே
    ஓசன்னாப் பாட்டுடனே தெய்வத்தை
    ஓயாமல் போற்றிடுவார்

8. பாவமில்லா உலகம் - இந்தப் புவி
    பாவஞ்செய்யும் உலகம் - அங்கே
    சாபமில்லா மகிமை இந்தப் புவி
    சாபத்தால் கெட்டதுவே

9. பாடு வருத்தமில்லை - இங்கே பல
    பாடுங் கொடுமையுமே - அங்கே
    வாடும் மனுஷரில்லை இங்கே யெல்லாம்
    வாடிப்போகும் பொருளே  

No comments:

Post a Comment