Sweet the moments - 634
(Tune 397 of ESB)
1. பாவ நாசர் பட்ட காயம்
பார்த்துணர்ந்து கொள்வது;
சுத்தம் செல்வம், நற்சகாயம்,
சமாதானம் உள்ளது!
பல்லவி
நேசிக்கிறேன், அல்லேலூயா
நேசிக்கிறேன் இயேசுவை;
அவர் என் இரட்சகரதால்
என்னையும் நேசிக்கிறார்
2. இரத்தம் வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று
தேவ நேசம் அதினாலே,
மானிடர்க்குத் தோன்றிற்று - நேசிக்கிறேன்
3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்
அவர் திவ்ய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன் - நேசிக்கிறேன்
4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன் - நேசிக்கிறேன்
5. நாதா நானும் மோட்சம் சென்று
உம்மைக் காணுமளவும்
நன்றியுள்ள நெஞ்சத்தோடு
உம்மைப் பற்ற அருளும் - நேசிக்கிறேன்
Walter W. Shirley
No comments:
Post a Comment