Tuesday, October 11, 2011

பாடல் 385: எல்லாமேசுவே


    இராகம்: நாட்டை தாளம்: அடதாளம்

    பல்லவி

    எல்லாமேசுவே - எனக் கெல்லாமேசுவே
   
    அனுபல்லவி

    தொல்லை மிகு மிவ்வுலகில் - சுகமில்லையே

    சரணங்கள்

1. ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும்
    நாயனு மெனக்கன்பான ஞான மணவாளனும் - எல்

2. தந்தை தாய் இனம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர்
    சந்தோட சகல யோக சம்பூரண பாக்கியமும் - எல்

3. கவலையிலாறுதலும் கங்குலிலென் ஜோதியும்
    கஷ்ட நோய்ப்படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் - எல்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
    ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் - எல்

5. அணியுமாபரணமும் ஆஸ்தியும் சம்பாத்தியமும்
    பிணையாளியும் மீட்பருமென் - பிரிய மத்தியஸ்தனும் - எல்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
    ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் - எல்

No comments:

Post a Comment