இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
பல்லவி
சத்ய வேதமே! இது சத்ய வேதமே!
நித்ய தேவனருளின சத்ய வேதமே!
சரணங்கள்
1. சத்ய வழி காட்டிடும் பக்தி வழிக் கோட்டிடும்
நித்திய வீடேகும் வரை கர்த்தன ருளுற்றிடும் - சத்ய
2. இருள் சூழ்ந்துலகில் நான் இடருறும்போதும் தான்
அருளொளி வீசி என்னை ஆபத்துக்கு நீக்குங்காண் - சத்ய
3. ஆத்ம பசி நீக்கிடும் அல்லல் யாவும் போக்கிடும்
நேர்த்தியாம் ஜீவ ஊற்றண்டை நிதமெனைச் சேர்த்திடும் - சத்ய
4. என்னை எனக்குக் காட்டி என்னிலை தெளிவாக்கி
உன்னதன் சமூக மென்னை ஓட்டும் திவ்ய நூலிது - சத்ய
5. நோயுறு மென் பாயிலும் நோவுறுமிப் பாரிலும்
மாய மறுந் தேறுதலும் மருந்து மிதாகிடும் - சத்ய
6. அன்றன்று அது தரும் ஆத்ம மன்னா தின்பவர்
என்றும் சாகா ஜீவன் பெற்று இன்பமுடன் வாழுவார் - சத்ய
S. சுபானந்தராஜ்
No comments:
Post a Comment