Monday, October 10, 2011

பாடல் 408: சத்திய வேத புத்தகமே


    இராகம்: தர்பார் தாளம்: ஆதி

    பல்லவி

    சத்திய வேத புத்தகமே

    அனுபல்லவி

    நித்திய திரியேக - கர்த்தன் அருளிச் செய்த

1. மத்தியஸ்தனைக் குற்றவாளிக்குக் காட்டும்
    வைத்தியனை நோயாளிக்குப் புகட்டும்
    இத்தரையோர்க் கொரு ரட்சிப்பை யூட்டும்
    இயேசுகிறிஸ்து நாமத்தைப் பாராட்டும் - சத்திய

2. ஆயிரமாயிரமான பொன் வெள்ளி
    அருமையைப் பார்க்கிலு மதிகம் விலையுள்ள
    தூய மறை உனக்கு ஒப்பாகச் சொல்ல
    தொல்லுலகில் ஒரு நூலுண்டோ?  அல்ல! - சத்திய

3. பிள்ளைகள் பெற்றோர்கள் புருஷர் மனைவிகள்
    பெலத்தோர் பெலவீனர்; பேதைகள் ஞானிகள்
    செல்வ ரெழியோர்கள் தேசிகர் மன்னர்கள்
    ஜெகத்தி லனைவர்க்கும் ஜீவ வசனங்கள் - சத்திய

4. புத்தி போதகத்துக்குரிய நன்னூலே
    போத ஆத்துமத்தின் போஜனப் பாலே
    பக்தி பரிவு நிறை பாச நீர்க்காலே
    பாவங்களைப் பிளக்கப் பாய்ந்திடும் வாளே - சத்திய

5. பாதைக்குரிய தீபமும் நீ யாவாய்
    பரிதிக்கு மேற்படும் பலனைச் சொரிவாய்
    சோதனைகளை வெல்ல திடனைத் தருவாய்
    சுவிசேஷ மீந்து நீ தேற்றியே  வருவாய் - சத்திய
                                                                             A.V. ஆபேல்

No comments:

Post a Comment