Friday, October 14, 2011

பாடல் 347: வீரரும் நாங்களே,ஜெயதீரரும் நாங்களே


    பல்லவி

    வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே - இயேசு
    ராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே!

    சரணங்கள்

1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,
    அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே - வீரரும்

2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்
    பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் - வீரரும்

3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,
    ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் - வீரரும்

4. நரக பாதையில் விரைந்து செல்வோரை
    இரக்கமுள்ள இயேசுவண்டை இழுத்துக் கொள்ளுவோம் - வீரரும்

5. சேனையிலே நாம் நல்ல சேவகம் செய்வோம்
    வானத்திற்கு ஏகு மட்டும் சோதனை வெல்வோம் - வீரரும்

No comments:

Post a Comment