Thursday, October 13, 2011

பாடல் 355: வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் - என்
    இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான்

2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!
    ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் - வாழ்த்திடுவேன்

3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!
    பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் - வாழ்த்திடுவேன்

4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்
    பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் - வாழ்த்திடுவேன்

5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!   
    நித்தமும் நீர் ஜீவிப்பதால் வாழ்த்திடுவேன் நான் - வாழ்த்திடுவேன்

6. தூதரோடு மேகமீது வாறேனென்றாரே
    நானும்மைக் காண்பதற்காய்க் காத்திருப்பேனே! - வாழ்த்திடுவேன்

7. உன் வரவில் முன்னணியில் நின்றிடவே நான்
    என்னை ப்ராப்தியாக்கிடுமேன் உம் கிருபையால் - வாழ்த்திடுவேன்
                                                                                                  K.S. Abraham

No comments:

Post a Comment