Wednesday, October 12, 2011

பாடல் 361: ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்


    பல்லவி

    ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் - எந்தன்
    ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்

    அனுபல்லவி

    அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் - நல்ல
    மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்

    சரணங்கள்

1. மேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்த
    பூலோக நாட்டமும் குறைகின்றதே;
    மாயையில் மனம் இனி வைத்திடாமல் - நேசர்
    காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை - இயேசு
    நாதன் என் பக்கமாய் வந்தனரே;
    பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் -  இந்த
    பாரதில் எனை வெற்றி சிறக்க செய்தார்

3. அற்புதமாம் அவர் நேசமது - எந்தன்
    பொற்பரன் சேவை என் தாகமது
    பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
    கற்புடன் அவர் பணி செய்திடவே

4. கானானின் கரை இதோ காண்கின்றதே - எந்தன்
    காதலன் தொனி காதில் கேட்கின்றதே;
    காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் - விரை
    வாக நம் ஓட்டத்தை முடித்திடுவோம்

5. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் - தாம்
    அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்;
    உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் - அங்கு
    பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

No comments:

Post a Comment