Wednesday, October 12, 2011

பாடல் 363: தோழரே! கொடி காணுது!


    Ho, my comrades,  see the signal - 804
                     (Tune 344 of ESB)

1. தோழரே! கொடி காணுது!
    பார்த்திடும் மேலே;
    புதிய சேனை வருது!
    ஜெயங் கிட்டுது!
   
    பல்லவி

    திடனாய் நில்லுங்கள், வாறேன்
    என்கிறார் இயேசு;
    விடமாட்டோம் உம் க்ருபையால்
    என்போமே பதில்!

2. பெருஞ் சேனை நெருங்குது,
    சாத்தான் முன் வாறான்;
    அரும் படையோர் மாள்கிறார்
    அஞ்சுதே நெஞ்சம் - திடனாய்

3. மகிமைக்கொடி வீசுது
    தாரை கேட்குது;
    தலைவர் நாமத்தால் ஜெயம்
    தவறாதது! - திடனாய்

4. யுத்தமோ மும்முரிக்குது
    சத்வம் ஏறுது;
    தளகர்த்தர் அதோ வாறார்!
    தைரியம் தோழரே - திடனாய்
                              Philip B. Bliss

No comments:

Post a Comment