Wednesday, October 12, 2011

பாடல் 377: இயேசுவின் நற்செய்தி சொல்வீர்


    Tell me the story of Jesus - 99
               (Tune 458 Of ESB)

1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,
    என் நெஞ்சில் பதியவே;
    உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
    சந்தோஷ செய்தி அதே!
    பாலனை வாழ்த்த விண்தூதர்
    கூடியே ஆர்ப்பரித்தார்
    விண்ணில் பிதாவுக்கே மேன்மை
    பூமியில் சினேகம் என்றார்

    பல்லவி

    இயேசுவின் நற்செய்தி சொல்வீர்
    என் நெஞ்சில் பதியவே;
    உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
    சந்தோஷ செய்தி அதே!

2. நாற்பது நாள் தீய காட்டில்
    சோதனையால் தவித்தார்;
    படாத பாடுகள் பட்டார்,
    சாத்தானையோ ஜெயித்தார்;
    யாருக்கும் நன்மைகள் செய்து
    சுற்றியே திரிந்தனர்,
    பாவிகளால் தள்ளப்பட்டு
    கஸ்திகள் அடைந்தனர் - இயேசுவின்

3. மீட்பர் தம் சிலுவை மீதில்
    தொங்கியே ஜீவன் விட்டார்;
    உயிர்தெழுந்தே மோட்ச வீட்டில்
    என்றும் வீற்றாளுகிறார்;
    ஆ! இந்த அன்பே பேரன்பு
    எந்தனை மீட்டுக் கொண்டார்
    ராஜாதி ராஜாவைப் போற்றும்!
    அன்பின் சொரூபியானார் - இயேசுவின்
                                                  Fanny Crosby

No comments:

Post a Comment