Wednesday, October 12, 2011

பாடல் 378: பாதை காட்டும்


    Guide me, O Thou great Jehovah - 578
                  (Tune 411, 431 of ESB)

1. பாதை காட்டும் மா யெகோவா
    பரதேசியான நான்
    பலவீனன், அறிவீனன்,
    இவ்வுலகம் காடுதான்,
    வானாகாரம்,
    தந்து என்னைப் போஷியும்

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
    நீர் திறந்து தாருமேன்;
    தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
    வழியில் நடத்துமேன்;
    வல்ல மீட்பா!
    என்னைத் தாங்கும் இயேசுவே

3. சாவின் அந்தகாரம் வந்து,
    என்னை மூடும் நேரத்தில்
    சாவின் மேலும் வெற்றி தந்து
    என்னைச்சேரும் மோட்சத்தில்
    கீத வாழ்த்தல்
    உமக்கென்றும் பாடுவேன்
                                  William Williams 1717 - 1791 (Wales - UK)

No comments:

Post a Comment